இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்களும், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களும் 2வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக் கூடாதும் என்றும், இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுக்க கடந்த சில தினங்களாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம், உண்ணா விரதம் மேற்கொண்டனர். இனால் தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள் கூட தற்காலிகமாக முடும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இதையடுத்து மீண்டும் கல்லூரிகள் கடந்த 16ம் திறக்கப்பட்டன.
இந் நிலையில், புதுச்சேரி மாணவர்களும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா நிலை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களும் 2-வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு திரைப்பட இயக்குனர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நன்றி
http://thatstamil.oneindia.in/news/2009/02/13/tn-lanka-students-on-hunger-strike-in-puducherry.html#cmntTop
Friday, February 13, 2009
இலங்கை போர் நிறுத்தம்-புதுச்சேரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!
Posted by புதுவைக்குயில் பாசறை at 8:15 PM
Labels: உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு
No comments:
Post a Comment