வருக வணக்கம்

Tuesday, August 4, 2009

முகாமுக்குள் ஒன்று சேர புலிகள் முயற்சி-கோத்தபயா

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலிகள் ஒன்று சேர்ந்து செயல்பட முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளி வரும் சண்டே ஐலன்ட் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

விடுதலைப் புலிகள் ராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்கள் மீண்டும் எழுச்சி பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பகுதியில் உள்ள முகாம்களில் மக்களுடன் தங்கியுள்ள விடுதலைப் புலிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது அந்த இயக்கத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும்.

முகாம்களில் இருந்து புலிகள் தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் தற்போது ராணுவம் மற்றும் போலீஸ் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முகாம்களில் உள்ளவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாக பொதுமக்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யமாட்டார்கள்.

இலங்கை ராணுவம் பெற்ற வெற்றிக்கு நாடு பெரும் விலை கொடுத்துள்ளதால் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதை அரசு எந்தவகையிலும் அனுமதிக்காது என்றார்.

50,000 பேர் தப்பினர்?

இதற்கிடையே, முகாம்களிலிருந்து இதுவரை 50 ஆயிரம் அகதிகள் தப்பி விட்டதாக சிங்கள லக்பிம இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் அரசு ஆதரவு கருணா உள்ளிட்டோரின் போராளிப் பிரிவினருக்கு பெரும் பணத்தை லஞ்சமாக கொடுத்து தப்பி விட்டனராம். ரூ. 1 லட்சம் முதல் பத்து லட்சம் வரை பணம் கொடுத்து இவர்கள் தப்பியுள்ளனராம்.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வவுனியா போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். தப்பியவர்களில் பலர் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் எனவும், இவர்கள் மக்களுடன் மக்களாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தப்பி வந்தவர்களில் பலர் ராணுவத்தினர், போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்துத் தப்பியுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.


நன்றி
தட்ஸ்தமிழ்

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்