புதுச்சேரி, அரியாங்குப்பம், புதுவைக்குயில் பாசறை சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படத்திறப்பு மற்றும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தூ.சடகோபன் (மதிமுக) நூல் வெளியிட இல.இராமதாசு (மதிமுக) பெற்றுக்கொண்டார். மேலும் ச.ஆனந்தகுமார், இராம.சிவபாலன் (தி.மு.க) பேராசிரியர் வேலழகன், நல்லாசிரியர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர் ஆனந்து, திரவிடச்செல்வம், கதிரவன், விசயபாஸ்கர், செல்வம், பிரபாகரன் (அரசு ஒப்பந்ததாரர்) மற்றும் அரிகேசவன், அ.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாமலர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
